இரவு விடுதியில் இருந்து வெளியேறி உபரில் பயணித்த பெண்ணிற்கு நேர்ந்த நிலை! அமெரிக்காவில் ஓட்டுனர் கைது
அமெரிக்காவில் உபர் ஓட்டுனர் கைது.
இளம்பெண் கொடுத்த புகாரையடுத்து பொலிசார் விசாரித்து எடுத்த நடவடிக்கை.
அமெரிக்காவில் இரவு விடுதியில் இருந்து வெளியே வந்து உபர் கால் டாக்சியில் ஏறி சென்ற இளம்பெண்ணிடம் அத்துமீறிய ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Bangor நகரை சேர்ந்த இளம்பெண் சில தினங்களுக்கு முன்னர் அங்குள்ள இரவு விடுதிக்கு சென்றார். அங்கு மது அருந்திய அவர் மதுபோதையில் வெளியில் வந்த நிலையில் தனியாக வீட்டிற்கு செல்லமுடியவில்லை.
இதையடுத்து உபர் கால் டாக்சியில் பயணித்தார். அடுத்தநாள் காலையில் காவல் நிலையம் சென்ற அப்பெண் தன்னிடம் உபர் ஓட்டுனர் அத்துமீறியதாக புகார் அளித்தார்.
Joseph Graston(WABI)
புகார் குறித்து விசாரித்த பொலிசார் 28 வயதான ஜோசப் கிராஸ்டன் என்பவரை கைது செய்துள்ளனர். ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவில் ஜோசப் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜோசப் கைதான சில மணி நேரத்தில் அவரை பணியில் இருந்து நீக்குவதாக உபர் அறிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.