பிரான்சில் தீவைத்து எரிக்கப்படும் 300 கோடி ரூபாய் மதிப்பிலான கருத்தடை சாதனங்கள்
பிரான்ஸ் நாட்டில், 300 கோடி ரூபாய் மதிப்பிலான கருத்தடை சாதனங்கள் தீவைத்து எரிக்கப்பட உள்ளன.
என்ன காரணம்?
பெல்ஜியம் நாட்டிலுள்ள சேமிப்பகம் ஒன்றில், சுமார் 10 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான கருத்தடை சாதனங்கள் சேமித்துவைக்கப்பட்டுள்ளன. இலங்கை மதிப்பில் அது சுமார் 300 கோடி ரூபாய் ஆகும்.
அவை, ஏழை நாடுகளுக்கு வழங்கப்படுவதற்காக, அமெரிக்க நிதி உதவியுடன் வாங்கப்பட்ட கருத்தடை சாதனங்கள் ஆகும்.
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து, அவர் வெளிநாடுகளுக்கு நிதி உதவி செய்யும் திட்டங்களை நிறுத்திவிட்டார்.
ஆகவே, அந்த கருத்தடை சாதனங்களை, திட்டமிட்டதுபோல், சம்பந்தப்பட்ட ஏழை நாடுகளுக்கு வழங்கமுடியவில்லை.
அவற்றை வாங்கிக்கொள்ள பல்வேறு உதவிக்குழுக்களும் ஐ.நா ஏஜன்சிகளும் வாங்கிக்கொள்ள முன்வந்தும், அவற்றைக் கொடுக்க ட்ரம்ப் மறுத்துவிட்டார்.
ஆகவே, அவை பிரான்சிலுள்ள மருத்துவக் கழிவுகளை எரிக்கும் வசதி கொண்ட ஒரு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு எரிக்கப்பட உள்ளன.
விடயம் என்னவென்றால், இந்த கருத்தடை சாதனங்கள் கிடைக்காததால், பல ஏழை நாடுகளிலுள்ள பெண்கள் அபாயகரமான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
அந்த நாடுகள், கருத்தடை சாதனங்களுக்காக அமெரிக்க உதவியையே பெருமளவில் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |