PSL: 6 விக்கெட் வீழ்த்தி புதிய வரலாறு படைத்த வீரர்! ஷஹீன் அஃப்ரிடி அணிக்கு மரண அடி
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முல்தான் சுல்தான்ஸ் வீரர் உஸாமா மிர் 6 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.
உஸ்மான் கான் அதிரடி
இந்தியாவில் IPL தொடர் போல பாகிஸ்தானில் PSL தொடர் நடத்தப்பட்டது வருகிறது. அதாவது பாகிஸ்தான் சூப்பர் லீக் (Pakistan Super League).
மொத்தம் 6 அணிகள் மோதும் இந்த தொடரின் 14வது போட்டி நேற்று நடந்தது. இதில் முகமது ரிஸ்வானின் முல்தான் சுல்தான்ஸ் அணியும், ஷஹீன் அஃப்ரிடியின் லாகூர் குவாலண்டர்ஸ் அணியும் நேற்று பலப்பரீட்சை நடத்தின.
முதலில் துடுப்பாடிய முல்தான் சுல்தான்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்கள் குவித்தது. 55 பந்துகளில் 96 ஓட்டங்கள் விளாசி உஸ்மான் கான் சதத்தினை தவறவிட்டார்.
உஸாமா மிர் மிரட்டல் பந்துவீச்சு
பின்னர் இமாலய இலக்குடன் லாகூர் அணி களமிறங்கியது. சாஹிப்ஸடா (31) மற்றும் பக்ஹார் ஜமான் (23) அதிரடி தொடக்கம் தந்தனர். அடுத்து களமிறங்கிய வான் டர் டுசனும் அதிரடியில் மிரட்டினார்.
ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. Leg break சுழற்பந்து வீச்சாளர் உஸாமா மிர் லாகூர் அணிக்கு சிம்ம செப்பமானமாக விளங்கினார்.
அவரது துல்லியமான பந்துவீச்சில் கடைசி 6 விக்கெட்டுகளும் வீழ்ந்தன. இறுதியில் 17 ஓவர்களில் லாகூர் அணி 154 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
வான் டர் டுசன் 22 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 30 ஓட்டங்கள் விளாசினார். முல்தான் அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உஸாமா மிர் PSL தொடரில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்தார். இப்போட்டியில் 2 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 96 ஓட்டங்கள் குவித்த உஸ்மான் கான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
Usman Khan, Usama Mir and Iftikhar Ahmed rewarded for their performances in the #LQvMS clash ✨#HBLPSL9 | #KhulKeKhel pic.twitter.com/SoPM08sCD6
— PakistanSuperLeague (@thePSLt20) February 27, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |