ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நுழைய தடை; சொத்து முடக்கம் - ட்ரம்ப்பிற்கு அமெரிக்க அமைப்பு பரிந்துரை
ஆர்எஸ்எஸ் மீது தடை விதிக்க வேண்டும் என USCIRF அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஆர்எஸ்எஸ் மீது USCIRF குற்றச்சாட்டு
1925 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட வலதுசாரி அமைப்பான ஆர்.எஸ்.எஸ், இந்தியாவை மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவின் தாய் அமைப்பாக கருதப்படுகிறது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்தியாவின் உளவு அமைப்பான RAW மீது கட்டுப்பாடு விதிக்குமாறு அமெரிக்காவின் USCIRF அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம்(USCIRF) ஒரு அமெரிக்க கூட்டாட்சி அரசாங்க ஆணையமாகும்.
இதன் ஆணையர்கள் அமெரிக்க ஜனாதிபதி, செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் உள்ள இரு அரசியல் கட்சிகளின் தலைமையாலும் நியமிக்கப்படுகிறார்கள்.

உலக அளவில் மத சுதந்திர மீறல்களின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை மதிப்பாய்வு செய்வதும் , ஜனாதிபதி, வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் காங்கிரஸுக்கு கொள்கை பரிந்துரைகளை வழங்குவதே இதன் முக்கிய பொறுப்பாகும்.
இந்த ஆண்டு இந்தியா குறித்து வெளியிட்டுள்ள பரிந்துரையில், இந்தியாவில் நிலவும் மதப் பதற்றங்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளுக்கு RSS அமைப்பு காரணமாக இருப்பதாகக் குற்றச்சாட்டியுள்ளது.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான எதிர்கால இராணுவ மற்றும் வர்த்தக உறவுகள், மத சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகளுடன் இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மத சுதந்திரத்தை தீவிரமாக மீறுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட நாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு வகையாக இந்தியாவை "குறிப்பிட்ட கவலைக்குரிய நாடு" என்று நியமிக்கவும் அமெரிக்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இதில் RSS அமைப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்வது, உறுப்பினர்கள் அமெரிக்காவில் நுழைய தடை செய்வது உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
காங்கிரஸ் வலியுறுத்தல்
இந்த அறிக்கையை சுட்டிக்காட்டிய இந்தியாவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ், அமெரிக்காவில் ஆர்எஸ்எஸ் மீது தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மேலும், மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சர்தார் படேல் இந்தியாவில் ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்தார்.
"𝐓𝐡𝐞 𝐔𝐒 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝 𝐢𝐦𝐩𝐨𝐬𝐞 𝐚 𝐛𝐚𝐧 𝐨𝐧 𝐑𝐒𝐒."
— Congress (@INCIndia) March 16, 2026
This recommendation was made to the Donald Trump administration by the USCIRF, an official US government body.
The USCIRF has warned that the RSS (Rashtriya Swayamsevak Sangh) poses a threat to people's religious… pic.twitter.com/sKQWjsDuwt
அரசியலமைப்பை எதிர்க்கும் மற்றும் மனுஸ்மிருதியின்படி நாட்டை நடத்துவதை ஆதரிக்கும் ஒரு அமைப்பு இந்த நாட்டின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்கு விஷம்" என குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் துடிப்பான பன்முக கலாச்சார சமூகத்தின் மீது அவநம்பிக்கைகளை ஏற்படுத்துவதற்கும் USCIRF தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்வதாகவும், பாரபட்சமான மதிப்பீடுகளை வழங்குவதாகவும் கடந்த ஆண்டு இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
மேலும், USCIRF குழுவிற்கு விசாக்களை வழங்க இந்தியா மறுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |