ஆரோக்கியமாக இருக்க நெய்யை எப்படி பயன்படுத்தணும் தெரியுமா?
இந்திய உணவு முறையில் நெய் முக்கிய பங்காற்றுகிறது. ஆயுர்வேதத்தில் பல மருத்துவ நன்மைகளைக் கொண்ட அத்தியாவசிய பொருளாக நெய் கருதப்படுகிறது.
வளமான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருளான நெய் ஆரோக்கிய வாழ்வுக்கு சிறந்த வழி என கூறலாம். வேத காலம் முதற்கொண்டே மக்களால் பயன்படுத்தப்பட்டு வரக்கூடிய நெய்யை ஆரோக்கிய வாழ்வுக்கு எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா?
ஒரு ஸ்பூன் நெய் ஒரு கிளாஸ் பாலுடன் மஞ்சள் மற்றும் கருப்பு மிளகுடன் பருக, செரிமான அமைப்பில் அதன் நச்சுகளை சுத்தம் செய்கிறது. இது மலச்சிக்கலுக்கு உதவுவதுடன், நோயெதிர்ப்பு அமைப்புக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கிறது.
நெய்யின் மிக முக்கியமான ஆயுர்வேத நன்மைகளில் ஒன்று வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. சுத்தமான நெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் மனநிலை பெரிதும் மேம்படுவதுடன் ஆற்றல் நிலைகளையும் சேர்த்து எடை குறைக்க உதவுகிறது.
மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு கொண்ட நெய் வீக்கம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது. இது சிறந்த தூக்கத்திற்கு உதவும். நெய் பியூட்ரிக் அமிலத்தின் வளமான ஆதாரமாகும். இது குடலில் உள்ள பாக்டீரியாவுக்கு புரோபயாடிக் உணவாக செயல்படுகிறது.
நெய்யில் வைட்டமின் கே 2 உள்ளது, இது எலும்புகள் கால்சியத்தை உறிஞ்சி மூட்டு வலிக்கு உதவுகிறது. நெய்யில் உள்ள சிஎல்ஏ கட்டிகளைக் குறைக்கிறது, கொழுப்பைக் குறைக்கிறது மற்றும் இரத்த சர்க்கரையை உறுதிப்படுத்துகிறது. இது பசியைத் தூண்டவும் உதவுகிறது.
நீரிழிவு, உடல் பருமன், அதிக கொலஸ்ட்ரால், இதய நோயாளிகள் மற்றும் பிசிஓஎஸ் போன்ற சுகாதார நிலைமைகள் உள்ளவர்கள் பயன்படுத்தும் நெய்யின் அளவில் கவனம் தேவை.