கொரோனா சிகிச்சையில் மஞ்சள் காமாலைக்கான மருந்து: ஆய்வில் வெளியான ஆச்சரிய முடிவுகள்!
மஞ்சள் காமாலை என சாதாரணமாக அழைக்கப்படும் ஹெப்படைடிஸ் நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்து ஒன்று கொரோனாவுக்கெதிராக பயன்படுகிறதா என்பதை அறிவதற்காக, சோதனை முயற்சியாக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கனடாவின் ரொரன்றோ கல்லீரல் நோய்களுக்கான மையத்திலுள்ள ஆய்வாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டார்கள்.
ஹெப்படைடிஸ் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் peginterferon-lambda என்ற மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து சோதித்துப் பார்த்தார்கள் அவர்கள். ஆய்வில், peginterferon lambda மருந்து, ஊசி மூலம் செலுத்தப்பட்ட நோயாளிகளின் உடலில் உள்ள வைரஸ்கள், ஏழு நாட்களில் நான்கு மடங்கு வேகத்தில் காணாமல் போவதை அவர்கள் கண்டுபிடித்தார்கள்.
ஏற்கனவே கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த peginterferon-lambda என்னும் மருந்தும் சமுதாயத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உதவும் என்பதற்கு ஆதாரமாக உள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் மீது பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆய்வு, நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையே தடுக்க உதவுமா என்பதைக் கண்டறிய ஆய்வாளர்கள் விரும்புகிறார்கள்.