புலம்பெயர்ந்தோருக்கு பதில் ரோபோக்களை பயன்படுத்தலாம்: பிரித்தானிய அமைச்சர் யோசனை
குறைந்த ஊதியம் அளிக்கும் வேலைகளில் புலம்பெயர்ந்தோரை வேலைக்கு அமர்த்துவதற்கு பதிலாக, ரோபோக்களை பயன்படுத்தலாம் என பிரித்தானிய நாடாளூமன்ற உறுப்பினர் ஒருவர் யோசனை தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தோருக்கு பதில் ரோபோக்கள்
நிழல் உள்துறைச் செயலர் என்னும் பொறுப்பு வகிப்பவரான நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் பிலிப், சில நாடுகள் காய்கறிகள், பழங்கள் பறிப்பது போன்ற வேலைகளுக்காக ரோபோக்களை பயன்படுத்துவது குறித்து பேசியுள்ளார்.
குறைந்த ஊதியம் அளிக்கும் வேலைகளுக்காக ஏராளமான புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பதிலாக, ரோபோக்களை அந்த நாடுகள் பயன்படுத்துகின்றன என்கிறார் அவர்.
உதாரணமாக, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் தானாக காய்கறிகள் மற்றும் பழங்களைப் பறிக்கும் ரோபோக்களைப் பயன்படுத்துவதாகவும், தென்கொரியா பிரித்தானியாவை விட ஏழு மடங்கு அதிக ரோபோக்களை தனது உற்பத்தி செயல்முறைகளில் பயன்படுத்துவதாகவும், அமெரிக்கா, கட்டுமானத் துறையில் modular construction என்னும் தானியங்கி செயல்முறையை பெரிய அளவில் பயன்படுத்துவதாகவும் பிலிப் தெரிவித்துள்ளார்.
ஆக, இந்த குறைந்த ஊதிய புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கான தேவை இல்லாமலே, அவர்களுடைய உதவி இல்லாமலே பிரித்தானிய தொழில்துறையைக் கட்டி எழுப்பும் பல விடயங்களைச் செய்யலாம் என்கிறார் கிறிஸ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |