கல் உப்பில் ஒளிந்துள்ள மருத்துவநன்மைகள்! இப்படி பயன்படுத்தி பாருங்க... நன்மை வந்து சேரும்
பொதுவாக உண்ணும் உணவின் சுவையை உயர்த்துவதற்கு உப்பு அத்தியாவசியமானது. அதிலும் சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்புதான் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.
அதை விட கல் உப்பை பயன்படுத்துவதுதான் உடலுக்கு நல்லது. அதில் 80-க்கும் மேற்பட்ட தாதுக்கள் உள்ளடங்கி இருக்கின்றன.
அவை உடல் இயக்கத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் பக்கபலமாக அமைந்திருக்கின்றன. அந்தவகையில் கல் உப்பில் அடங்கியுள்ள நன்மைகள் என்ன? இதனை எப்படி எடுத்துக்கொள்ளலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
- காலை வேளையில் இரப்பையில் பித்தம் நிறையத் தேங்கி நிற்கும். இதன் காரணமாக காலை, வேளையில் கிறுகிறுப்பு வாந்தி ஏற்படும். இதனை போக்க ஒரு கைப்பிடியளவு உப்பை எடுத்து, அதே அளவு முருங்கை கீரையுடன் அம்மியில் வைத்துத் தட்டிக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, அந்தச் சாற்றைக் காலையில் எழுந்தவுடன் குடித்து விட்டால் உடலிலுள்ள பித்தம் எல்லாம் வெளியேறி விடும். பித்த சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.
- உப்பைச் சட்டியில் போட்டு நன்றாக வறுத்து, அதை ஒரு சிறிய துண்டுத் துணியில் கொட்டிச் சிறிய மூட்டை போலச் சேர்த்துக் கட்டி, நல்ல சூடாக இருக்கும் பொழுது வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இந்தவிதமாக ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ஒத்தடம் கொடுத்தால் வேதனைக் குறைந்துவிடும்.
- காயம்பட்ட புண்ணின் மேலுள்ள இரத்தத்தைச் சுத்தம் செய்துவிட்டு, தேவையான அளவு மிளகாய்த் தூளை எடுத்து அதே அளவு உப்புத் தூளையும் ஒன்றாகச் சேர்த்து கொஞ்சம் வேப்ப எண்ணெய்விட்டுக் கிளறி ஒரு கரண்டியில் போட்டு நன்றாகச் சூடேறச் செய்து, இறக்கி தாளக்கூடிய சூட்டுடன் இதைக் காயத்தின் மேல் வைத்துக் கட்டிவிட்டால் காயம் பட்ட புண் ஆறும்.
- வீக்கம், இரத்தக்கட்டு குணமாக இடத்திற்குத் தேவையான அளவு உப்பும், அதே அளவு புளிச்சதையையும் சேர்த்துக் குழம்புக்குக் கரைப்பது போல கெட்டியாகக் கரைத்து, ஒரு இரும்புக் கரண்டியில் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க விடவேண்டும்.
- கொதித்தபின் இறக்கிவைத்து அது ஆறிவரும் சமயம் தாளக்கூடிய சூட்டுடன் எடுத்து, வீக்கம், இரத்தக்கட்டு உள்ள இடத்தில் கனமாகப் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் வாடும். இரத்தக்கட்டு குணமாகும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022