பயன்பாட்டில் இல்லாத பழைய Smart phone வீட்டு டிராயரில் தூசி படிந்து இருக்கா? அதை இப்படிலாம் சூப்பரா யூஸ் பண்ணலாம்
பலரும் புதிய ஸ்மார்ட் போன்களை வாங்கும் போது பழைய போன்களை அப்படியே வீட்டு டிராயரில் போட்டுவிடுவார்கள்.
பழைய ஸ்மார்ட்போனை டிராயரில் தூசி படிய வைக்கவோ அல்லது வீட்டின் மூலையில் வெறுமனே வைக்க வேண்டும் என்றோ அவசியமில்லை.
அதை பல உபயோகமான விடயங்களுக்காக பயன்படுத்தமுடியும்.
செக்யூரிட்டி கேமரா
உங்களின் பயன்பாட்டில் இல்லாத ஸ்மார்ட் போனை வீட்டு பாதுகாப்பு கேமராவாக மாற்றலாம். உங்கள் பழைய மற்றும் புதிய சாதனத்தில் ஆல்பிரட் போன்ற பாதுகாப்பு கேமரா செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். பின்னர் புதிய ஸ்மார்ட்போன் மூலம் பழைய போனில் ரெக்கார்ட் ஆகும் விடயங்களை செக்யூரிட்டி கேமரா பதிவாக பார்க்க முடியும்.
சிறுவர்களுக்கு கொடுக்கலாம்
வீட்டில் உள்ள சிறார்களுக்கு புதிய போன் வாங்கி தர விருப்பமில்லை என்றால், நமது பழைய போனை அவர்களுக்கு கொடுக்கலாம். அதில் Wi-Fi மூலம் படங்களை அனுப்புவது, இணையதளத்தை பயன்படுத்துவது, கேம்ஸ் விளையாடுவது போன்ற விடயங்களை அவர்கள் செய்ய முடியும்.
வீடியோ அழைப்பு \ சேட்கள்
வீட்டில் உள்ள பெரியவர்கள், சிறார்கள் தங்களுக்கு பிடித்தவர்களுடன் வீடியோ அழைப்பில் பேச நாம் உபயோகப்படுத்தாத ஸ்மார்ட் போன் உதவி செய்யும், இதற்கு சிம் கார்டு கூட போடவேண்டியதில்லை, Wi-Fi பயன்படுத்தி வாட்ஸ் அப் போன்ற செயலிகள் மூலம் வீடியோ, ஆடியோ அழைப்பில் பேசலாம்.
டிவி ரிமோட்
பயன்பாட்டில் இல்லாத ஸ்மார்ட் போன்களை டிவி ரிமோட்டாகவும் பயன்படுத்தலாம். வீட்டில் ஸ்மார்ட் டிவி இருந்தாலே இது சாத்தியம் தான்.
மீடியா ப்ளேயர்
பழைய ஸ்மார்ட் போன்கள் புத்தகமாக, பாடல்களை கேட்கும் சாதனமாக பயன்படுகிறது. Wi-Fi மூலம் படங்களை டவுன்லோட் செய்தும் பார்க்கலாம்.