எடை இழப்பு முதல் பளபளப்பான சருமம் வரை பெற உதவும் நாட்டு சர்க்கரை: அவசியம் தெரிஞ்சிக்கோங்க
வெள்ளை சர்க்கரையை விட நாட்டு சர்க்கரையும், தேனும் ஒருவகை இனிப்பு மருந்தாகும்.
வெள்ளை சர்க்கரையை வெள்ளை நிறத்திற்கு கொண்டு வர பல கெமிக்கல்கள் பயன்படுத்துகின்றன. நாட்டுச்சக்கரை என்பது கரும்புச்சாறில் இருந்து வெல்லப்பாகை எடுத்து தயாரிக்கப்படும் சர்க்கரை ஆகும்.
நாட்டு சர்க்கரை இயற்கை நிறம் மற்றும் மணத்துடன் கிடைப்பதால் அதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கின்றன.
அன்றாட வாழ்வில், நாட்டு சர்க்கரையை பயன்படுத்துவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
கிடைக்கும் நன்மைகள்
நாட்டுச்சக்கரையில் வைட்டமின் பி6, நியாசின் மற்றும் பாந்தோதெனிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சரும செல்களுக்கு புத்துணர்ச்சியூட்டவும், இறந்த செல்களை அகற்றி புதிய செல்களை உருவாக்கும்.
நாட்டு சர்க்கரையால் சருமத்தை ஸ்க்ரப் செய்வதன்மூலம், இறந்த செல்கள் சரும துளைகளில் படிந்திருக்கும் அவற்றை நீக்கும் மேலும் அழுக்கு மற்றும் தூசுக்களை அகற்றி, பளபளப்பான சருமத்தைப் பெற உதவும்.
நாட்டுச்சக்கரையில் குறைந்தளவு கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க மற்றும் பராமரிக்க இது பெரிதளவில் உதவுகிறது. மேலும், இதில் பசியைக் கட்டுப்படுத்தும் திறன் இருப்பதால், எடையை குறைக்க உதவுகிறது.
நாட்டு சர்க்கரையில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு மற்றும் வலிகளைப் போக்கவும், வயிற்றுப் பிடிப்புகளைப் போக்கவும், வலியைக் குறைக்கவும், நாட்டுச் சர்க்கரை பயன்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |