கீறல் விழுந்த ஸ்க்ரீன் மொபைலை பயன்படுத்துவதால் என்ன ஆகும் தெரியுமா?
உங்கள் மொபைல் ஸ்க்ரீனில் இருந்து உங்கள் கைகளை பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம்.
ஒரு சிறிய கீறல் மொபைல் போன் ஸ்க்ரீனில் இருந்தால் கூட அதனை பெரிதுபடுத்தாமல் பயன்படுத்துபவர்களுக்கு சில விபரீதங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
உதாரணமாக ஒரு மலேசிய நபர் ஸ்க்ரீன் பாதிக்கப்பட்ட மொபைல் போனை பயன்படுத்தியதால் அவருடைய விரல் மற்றும் உள்ளங்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடைந்த மொபைல் ஸ்க்ரீனில் உள்ள கண்ணுக்கு தெரியாத சில துகள்கள் அவருடைய கைகளை பாதித்துள்ளது.
அதே போல 23 வயதான அசுவான் இக்பால் அப்துல்லா என்பவர் உடைந்த ஸ்க்ரீனை உடைய மொபைல் போனை சில காலம் பயன்படுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக விரலையே இழக்கும் அபாய கட்டத்திற்கு அவர் சென்றார்.
ஆம்! அவருடைய கைகளில் இருந்த ஸ்க்ரீனில் உள்ள துகள்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டதால் அவருக்கு வரவிருந்த மிகப்பெரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இன்னும் சில காலம் அவர் இதனை கவனிக்காமல் இருந்திருந்தால் அவர் தன்னுடைய கட்டை விரலை இழந்திருப்பார்.
ஒரு மொபைலில் ஸ்க்ரீன் உடைந்துவிட்டால் அதை மாற்றும் போது செலவும் வைக்க தான் செய்யும். ஆனால் அதை பார்த்தால் பிரச்சனைகள் ஏற்பட்டு அறுவை சிகிச்சை, தொற்று, மிகுந்த வலி என அவஸ்தைகளை தான் அனுபவிக்க வேண்டும்.