உங்கள் Smartphone நீண்டகாலம் பிரச்சனை பண்ணாம உழைக்கனுமா? இதை செய்யுங்கள்
செல்போன்கள் வைத்திராத நபர்களையே பார்க்க முடியாது என்பது போல எல்லோர் கைகளிலும் செல்போன் தவழ்கிறது.
வாழ்க்கைக்கு அத்தியாவசியமாகிவிட்ட செல்போன் நீண்ட காலம் பயன் தர என்ன செய்யலாம்?
பேட்டரியின் ஆயுளில் கவனம் செலுத்தினால் செல்போன்களும் நீண்டகாலம் உழைக்கும். பேட்டரியின் ஆயுளை காக்க எப்போது பேட்டரி சார்ஜ் தீர்கிறதோ அந்த நேரத்தில் சார்ஜ் செய்யத் தொடங்கினால் போதுமானது. 80 சதவீதம், 90 சதவீதம் பேட்டரி மிச்சமிருக்கும் போதெல்லாம் சார்ஜ் போடக்கூடாது, அப்படி செய்தால் பேட்டரியின் ஆயுள் குறைந்துவிடும்.
செல்போன்களில் `புளூடூத்` உபயோகித்து முடித்ததும் அதை ஆப் செய்து விட வேண்டும். இது கதிர்வீச்சு முறையில் அருகில் உள்ள செல்போன்களை தொடர்பு கொள்ளும் வசதி என்பதால், அதிக சக்தியை பயன்படுத்திக் கொள்ளும். இதோடு செல்போனுக்குள் வைரஸ் பரவவும் வாய்ப்புள்ளது.
தேவையற்ற சத்தங்களையும், வைப்ரேஷன் அதிர்வையும் எப்போதும் `ஆன்’ செய்து வைத்திருக்க வேண்டாம். உதாரணமாக `கிபோர்டு டோன்’, `ஸ்டார்ட் அப் டோன்’ ஆகியவை மிக அவசியமானவை அல்ல. எனவே இவற்றை குறைவாக பயன்படுத்தலாம்.
உபயோகப்படுத்தும் ஆப்ஷன்களை மட்டும் எப்போதும் `ஆக்டிவ்’-இல் வைத்திருக்க வேண்டும். எப்போதோ உபயோகிக்கும் ஆப்சன்களையும், தேவையில்லாத ஆப்சன்களையும், `ஆப்’ செய்து வைத்திருப்பது பேட்டரி ஆயுளை நீடிக்கும்.
ஸ்மார்ட்போன்கள் 24 மணிநேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் இயங்கும், ஆனால் இதை சுவிட்ச் ஆப் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அதன்படி ஸ்மார்ட்போன்களை நாம் இயக்காமல் வைத்திருந்தால் கூட அதில் இருந்து கதிர்வீச்சுகள் வெளியாகிறது.
கதிர்வீச்சின் அளவு மற்றும் அதன் விளைவுகள் மிகவும் சர்ச்சைக்குரியவை. வல்லுநர்கள் கதிர்வீச்சு அளவை முடிந்தவரை குறைவாக வைத்திருக்க அறிவுறுத்துகிறார்கள். இதை செய்வது மிக எளிது, அதாவது இரவு நேரத்தில் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டால் போதும். இப்படி செய்வது கதிர்வீச்சு வெளியாவது கட்டுபடும்.