பெண்களை உஷார்... இந்தவகை நாப்கினை பயன்படுத்துவதனால் புற்றுநோய் ஏற்படுமாம்
பொதுவாக ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாய் காலங்களில் தன் வாழ்நாளில் சராசரியாக 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் நாப்கின்களை பயன்படுத்துகிறார்.
ஆனால் குறிப்பிட்ட சில பெண்கள் நாப்கினால் அசௌகரியத்துக்குள்ளாகின்றனர். ஏனெனில் சில நாப்கின்களில் கலந்திருக்கும் ரசாயனங்கள் பெண்களின் உடலுக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கின்றது.
அந்தவகையில் தற்போது ரசாயனம் கலந்த நாப்கின் பயன்படுத்துவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பார்ப்போம்.
புற்றுநோயை ஏற்படுத்துமா? நாப்கின்கள் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானவைதான் என்றாலும் மாதவிடாய் உதிரப்போக்கை உறிஞ்சக்கூடிய டையாக்சின் மற்றும் பாலிமர் போன்ற சில வேதிப்பொருட்கள் அதில் இடம்பெற்றிருப்பது பிறப்பு உறுப்பில் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உருவாக்கக்கூடும்.
அத்துடன் டையாக்சின் உடலில் சேர்ந்தால் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படலாம். அதனால்தான் 3-4 மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கினை மாற்றிவிட வேண்டும். டையாக்சின் என்பது நாப்கின்களை பிளீச்சிங் செய்வதற்கு பயன்படுத்தப்படும் ரசாயனமாகும்.
இது பலவிதமான நோய் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. அதுபோல் நாப்கின்களில் வாசனைக்காக செயற்கை நறுமண பொருட்களை சேர்க்கிறார்கள்.
அதுவும் ஆபத்தானது. நாப்கின்களை முறையாக பயன்படுத்தாவிட்டால் கருத்தரிப்பதில் சிக்கல், ஹார்மோன் பிறழ்ச்சி, உறுப்பு பகுதியில் ஒவ்வாமை, இடுப்பு பகுதியில் அழற்சி, தைராய்டு குறைபாடு போன்ற பாதிப்புகளும் உருவாகக்கூடும்.
நாப்கின் தயாரிப்பில் பருத்தி பயன்படுத்தப்பட்டாலும் அதனை விளைவிப்பதற்கு பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துவது கூட பாதிப்பை ஏற்படுத்தும்.
அத்துடன் பருத்தியை பளிச்சென்ற வெண்மை நிறத்திற்கு மாற்றுவதற்கும் டையாக்சினை பயன்படுத்துகிறார்கள்.
டையாக்சின் அதிகம் கலப்பது, பாதிப்பை ஏற்படுத்தும். எனவே முடிந்தவரை ரசாயனம் குறைந்த நாப்கின்களை பயன்படுத்துவதே நல்லது.