கிரிக்கெட் தான் முக்கியம்! மனைவிக்கு குழந்தை பிறக்கவுள்ள நிலையில் வேறு நாட்டுக்கு செல்லும் நட்சத்திர வீரர்
அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் உஸ்மன் கவாஜா பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் தொடரில் விளையாடும் நிலையில் மனைவி பிரசவத்தின் மீது அவருடன் இருக்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் பிறந்த உஸ்மன் அவுஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவுஸ்திரேலிய அணி அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு சென்று டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
உஸ்மன் மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ள நிலையில் குழந்தை பிறக்கும் போது உஸ்மன் உடன் இருக்க மாட்டார் என தெரியவந்துள்ளது.
இது குறித்து உஸ்மன் கூறுகையில், கிரிக்கெட்டுக்கு தான் நான் முன்னுரிமை கொடுப்பேன் என என் மனைவிக்கு தெரியும்.
நான் பாகிஸ்தானில் பிறந்தவன் என்பதால் அங்கு விளையாடுவது சிறப்பானதாகும். அது எனக்கு மிகவும் முக்கியமானது.
எனக்கு என் மனைவி மிகவும் உறுதுணையாக இருக்கிறாள், என்னால் முடிந்த எந்த வகையிலும் நான் அவளை ஆதரிக்க முயற்சிப்பேன் என்று அவளுக்குத் தெரியும் என கூறியுள்ளார்.