கனடா பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்: அகதிகள் ஆதரவு அமைப்பொன்று கோரிக்கை
பிரித்தானியாவிலிருந்து கனடாவுக்கு வேலை செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட லட்சக்கணக்கான பிரித்தானிய குழந்தைகள் கனடாவில் சொல்லொணாத் துயரை அனுபவித்த நிலையில், கனடா பிரதமர் அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என அகதிகள் ஆதரவு அமைப்புகள் கோரியுள்ளன.
கனடாவுக்கு வேலை செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்ட லட்சக்கணக்கான பிரித்தானிய குழந்தைகள்
1869க்கும் 1948க்கும் இடையில், சுமார் 115,000 பிரித்தானியக் குழந்தைகள், ஆதரவற்ற இல்லங்களிலிருந்து, வேலை செய்வதற்காக கனடாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அவர்கள் கனடாவில் பண்ணைகளிலும் வீடுகளில் வேலைக்காரர்களாகவும் பணி செய்யவைக்கப்பட்டனர். அப்போது அவர்கள் மோசமாக நடத்தப்பட்டுள்ளார்கள்.
Pic: The Canadian Press via AP
அவர்களில் பலர் தற்காலிகமாக ஆதரவற்ற இல்லங்களில் தங்கியிருந்த நிலையில், அவர்களுடைய பெற்றோருக்குத் தெரியாமலே அந்த பிள்ளைகள் கனடாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.
மன்னிப்புக் கேட்க கோரிக்கை
இதேபோல பிள்ளைகள் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவும் பிரித்தானியாவும் நடந்த தவறுகளுக்காக முறைப்படி மன்னிப்புக் கேட்டன.
ஆனால், கனடா மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டது. இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, முறைப்படி மன்னிப்புக் கேட்கவேண்டுமென Home Children Canada என்னும் அகதிக் குழந்தைகள் ஆதரவு அமைப்பு புகார் மனு ஒன்றை கனடா பிரதமருக்கு அனுப்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |