சுவிட்சர்லாந்தை உலுக்கிய இதய அறுவை சிகிச்சை ஊழல்... சமீபத்திய தகவல்
Zurich University Hospital pays compensation following heart surgery scandal: சுவிட்சர்லாந்தை உலுக்கிய இதய அறுவை சிகிச்சை ஊழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்திலுள்ள இதய அறுவை சிகிச்சை மருத்துவமனை ஒன்றில், வழக்கத்தைவிட கூடுதலாக 68 முதல் 74 நோயாளிகள் உயிரிழந்ததைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதய அறுவை சிகிச்சை மருத்துவமனையில் நிகழ்ந்த உயிரிழப்புகள்
சுவிட்சர்லாந்தின் சூரிக் பல்கலை மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சைப் பிரிவில், 2016ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், கூடுதலாக 68 முதல் 74 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

அதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உண்மையாகவே அந்த மருத்துவமனையில் பிரச்சினை உள்ளது என்பதை தாமதமாகத்தான் கண்டறிந்துள்ளார்கள்.
அதாவது, குறிப்பிட்ட சில இதய அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் Cardioband என்னும் ஒரு கருவிதான் உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்துள்ளது என நம்பப்படுகிறது.
அதாவது, அந்த மருத்துவமனையின் இயக்குநராக இருந்த பேராசிரியர் ஃப்ரான்செஸ்கோ ( professor Francesco Maisano) என்பவர், அந்த Cardioband கருவிகளை தயாரிக்கும் நிறுவனத்தில் பங்குகள் வைத்திருந்திருக்கிறார்.
அந்த நிறுவனத்திடம் பணம் வாங்கிக்கொண்டு, அந்த Cardioband கருவிகளை நோயாளிகள் உடலில் பயன்படுத்தியுள்ளார் பேராசிரியர் ஃப்ரான்செஸ்கோ.
அவர் அந்த நோயாளிகள் உடலில் அந்த Cardioband கருவிகளை பொருத்தாமல் இருந்திருந்தால், அவர்கள் வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தால், இப்போதும் உயிருடன் இருந்திருக்கக்கூடும்.
இழப்பீடு
இந்நிலையில், சூரிக் பல்கலை மருத்துவமனை, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு முதல் முறையாக இழப்பீடு வழங்கியுள்ளதாக சுவிஸ் ஊடகமான swissinfo.ch தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் 20 பேர் இழப்பீடு கோரியிருந்த நிலையில், அவர்களில் 14 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக சூரிக் பல்கலை மருத்துவமனை தெரிவித்துள்ளது.
என்றாலும், எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.