பிரான்சில் அடுத்த மாதம் முதல் இதன் கட்டணம் உயர்வு! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிரான்சில், வரும் மாதத்தில் இருந்து எரிவாயு கட்டணம் மிக கணிசமாக உயர்வடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைவாக இருந்தாலும், மக்களின் அன்றாட வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
இந்நிலையில், மார்ச் 1-ஆம் திகதி முதல் எரிவாயு கட்டணம் விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக Commission de régulation de l'énergie அறிவித்துள்ளது.மொத்தமாக 5.7 சதவீதத்தால் கட்டணம் அதிகரிக்க உள்ளது.
சமையலுக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்கு 1.5% வீதமும், சமையல் மற்றும் வெந்நீருக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்கு 3.4% வீதமும், சமையல், வெந்நீர் மற்றும் வெப்பமூட்டிக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்கு 5.9% வீதமும் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது.
குளிர் கால தேவை கருதி இந்த விலைக்கட்டணம் அதிகரிக்கப்படுவதாக Commission de régulation de l'énergie தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.