முதலிரவு அறைக்குள் சென்ற புதுமணதம்பதி - அடுத்த நாள் காலை உறவினருக்கு காத்திருந்த அதிர்ச்சி
முதலிரவு அறைக்குள் மகிழ்ச்சியா சென்ற தம்பதி அடுத்த நாள் காலை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலிரவு அறைக்குள் நுழைந்த தம்பதி
உத்தரப்பிரதேச மாநிலம், பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரதாப் யாதவ் (22). கடந்த 30ம் தேதி இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா யாதவ் (20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. தடபுடலாக திருமணம் முடிந்து அன்று இரவு கணவன், மனைவி முதலிரவு அறைக்குள் நுழைந்தனர்.
மறுநாள் காலையிலிருந்து மதியம் வரை புதுமண தம்பதி இருவரும் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. இவர்கள் வெளியே வருவார்கள் என்று காத்திருந்த உறவினர்கள் கதவை தட்டினர். ஆனால், யாரும் எழுந்து வரவில்லை. மீண்டும் கதவை தட்டித் தட்டிப் பார்த்தனர் எந்த சத்தமும் வரவில்லை.
ஒரே அறையில் இறந்துக் கிடந்த தம்பதி
இதனையடுத்து, சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளேச் சென்று பார்த்தனர். அப்போது அறைக்குள் புதுமண தம்பதி இருவரும் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில், இருவரும் ஒரே நேரத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோசமான காற்றோட்ட அறையில் தூங்கியபோது, அவர்களுக்கு இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், தம்பதியின் உடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இருவரும் ஒரே தீயில் தகனம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.