அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த நாளங்களில் அடைப்பு - மருத்துவர்கள் தகவல்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த நாளங்களில் 3 இடங்களில் அடைப்பு இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது
நேற்று தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான பல இடங்களிலும், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் திடீரென்று அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அவர் கீழே சாய்ந்தார். உடனடியாக அவரை சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் அடித்து துன்புறுத்தியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
@jeyaharshan
ரத்த நாளங்களில் அடைப்பு
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்த நாளங்களில் 3 இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, ஆஞ்சியோ பரிசோதனை செய்த பிறகுதான் ரத்த நாளங்களில் உள்ள அடைப்பு பற்றி தெரியவரும் என்றும், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |