வாஸ்து பிரச்சனை எதுவாக இருந்தாலும்... இந்த செடி மட்டும் போதும்! வீட்டில் மறக்காம வைத்திடுங்க
பொதுவாகவே வீடு கட்டினால் வாஸ்து பார்த்து தான் வீடு கட்டுவார்கள். சமையல், குளியல், படுக்கை அறை என அத்தனைக்கும் வாஸ்து முக்கியத்தும் வழங்குகின்றது.
இதில் வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு வாஸ்து செய்ய முடியாமல் கஷ்டப்படும் மக்கள் தான் அதிகம் எனலாம்.
ஆகவே வீட்டில் அனைத்து செல்வமும் பெற்று வாழ சிறந்த ஒரு வழியாக மருதாணி காணப்படுகின்றது. இந்த மருதாணி செடியை எப்படி பயன்படுத்தலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
எந்த வீட்டில் மருதாணி செடி இருக்கின்றதோ அந்த வீட்டில் கெட்ட சக்திகள் இருக்காதுஎன்று முன்னோர்கள் கூறினர். அதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் அதன் வாசணை தான் முக்கியமாக இருக்கும்.
மருதாணி இலையுடைய வாசணையிற்கு கெட்ட சக்திகள் மட்டுமல்ல, பூச்சிகளும் வராமல் தடுக்கும்.
துஷ்ட சக்தியை எப்படி விரட்டலாம்?
வெள்ளிகிழமைகளில் சாம்பிராணி போடும் போது அதனுடன் மருதாணி விதைகளையும் நான்கு சேர்த்து போட்டால், அதனுடைய வாசணையிற்கு வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் எல்லாம் நீங்கி விடும்.
வெள்ளிக்கிழமை மட்டுமல்லாமல் தினமும் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.
மேலும் வாடகை வீட்டில் இருப்பவர்கள் தான் இந்த பிரச்சினையில் முக்கியமாக தாக்கப்படுகின்றார்கள் எனலாம்.
ஆகவே வாடகை வீட்டில் இருப்பவர்கள் சிறிய தொட்டியில் மருதாணி செடியை வளர்த்து வந்தால் வீட்டில் வாஸ்து பிரச்சினை இருக்காது என்று வாஸ்து நிபுணர்களால் குறிப்பிடப்படுகின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |