சுவிட்சர்லாந்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: வேலை பெற என்ன வழி?
உலக நாடுகள் பலவற்றை ஒப்பிடும்போது, சுவிட்சர்லாந்து தனது பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியம் பல மடங்கு அதிகம்.
வேலைவாய்ப்புகளும் அங்கு கொட்டிக்கிடக்கின்றன. ஆனாலும், விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அங்கு வேலை கிடைப்பதில்லை.
ஆக, வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு உதவும் சில விடயங்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
வேலை பெற என்ன வழி?
நீங்கள் எந்த நாட்டவர் என்பது முக்கியமான விடயம்
ஒரு குறிப்பிட்ட வேலைக்கு சுவிட்சர்லாந்தில் பொருத்தமான ஆள் கிடைக்காத பட்சத்தில், சுவிஸ் நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய தடையில்லா வர்த்தக நாடுகள் முதலான நாடுகளிலிருந்து அந்த வேலைக்கு ஆட்களை எடுக்கின்றன.
ஆக, நீங்கள் மேல் குறிப்பிட்ட நாடுகளின் குடிமகனாக இருந்தால், உங்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மற்ற நாட்டவர்கள் சோர்ந்துபோகவேண்டாம்
அதனால் மற்ற நாட்டவர்கள் சோர்ந்துபோகவேண்டாம். காரணம், இது வேலைக்கு ஆட்களை எடுப்பதற்கான விதி, அவ்வளவே. ஆகவே, சில சந்தர்ப்பங்களில் மூன்றாம் நாடுகளின் குடிமக்களுக்கும் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
திறமைகள்
சுவிட்சர்லாந்தில், சுகாதாரத்துறையில், 15,790 பணியிடங்களும், கட்டுமானத்துறையில் 13,566 பணியிடங்களும் காலியாக உள்ளன.
சில்லறை வர்த்தகத்துறையில் 12,761 பணியிடங்களும் , உணவகத்துறையில் 10,478 பணியிடங்களும், தகவல் தொழில்நுட்பத்துறையில் 8,000 பணியிடங்களும் காலியாக உள்ளன.
இந்தத் துறைகளில் திறமைபடைத்தவர்கள் வேலைகளுக்கு முயற்சி செய்யலாம்.
மொழி
சுவிட்சர்லாந்தில் உங்களுக்கு வேலை கிடைப்பதற்கு ஜேர்மன், பிரெஞ்சு அல்லது இத்தாலி மொழி ஆகிய இந்த மொழிகளில் ஒரு மொழி தெரிந்திருக்கவேண்டியது அவசியமாகும்.
இதுபோக, உங்கள் திறமைகளை படம்பிடித்துக்காட்டும் ஒரு நல்ல CVயும் அவசியம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |