பாடசாலைகளைத் திறப்பதற்கு முன் மாணவர்களுக்குத் தடுப்பூசி!

Corona Virus School COVID - 19 COVID-19 vaccines
By Rakesh Jun 05, 2021 06:45 AM GMT
Report

இலங்கையில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாவதற்கு முன்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கொரோனாத் தடுப்பூசிகளைச் செலுத்துவதற்குக் கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

மேலும், மாணவர்களுக்குத் தடுப்பூசி போடுவது குறித்து ஏற்கனவே சுகாதார அதிகாரிகளுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. "ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செலுத்துவதற்கு தடுப்பூசிகளைக் கோரியுள்ளோம்.

இருப்பினும், இது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னரும், பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்பும் தடுப்பூசி கிடைத்தால் சிறப்பாக இருக்கும்" என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், மருத்துவ நிபுணர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், "தடுப்பூசி போடுவதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்போது, சிறுவர்களுக்கும் அந்த முன்னுரிமையை வழங்க வேண்டும்.

ஏனெனில், சிறுவர்கள் தங்கள் தாத்தா, பாட்டிகளுக்கு வைரஸைப் பரப்பக் கூடிய சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. இலங்கை மக்கள் தொகையில் 1.6 வீதமானவர்கள் இரண்டு டோஸ்களையும், 7 வீதமானோர் ஒரு டோஸையும் பெற்றுள்ளார்கள்.

60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களின் இறப்பு விகிதம் சிறுவர்களை விட 50 முதல் 100 மடங்கு அதிகம் என்பதால் இறப்புகளைத் தடுப்பதற்காக வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் மக்கள் தொகையில் 25 வீதம் அல்லது சற்றே அதிகமாக சிறுவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் நோயைப் பரப்பக்கூடிய சந்தர்ப்பங்கள் நிறைய இருக்கின்றன.

சிறுவர்களுக்கான உரிமம் பெற்ற ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசி ஜூலை அல்லது அடுத்த மாதமளவில் இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கின்றோம். எனவே, சிறுவர்களுக்குக் குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்" - என்றார்.

பிரான்ஸ், ஜேர்மனி, போலந்து, லிதுவேனியா, இத்தாலி, எஸ்டோனியா மற்றும் ஆஸ்திரியா போன்ற நாடுகள் இந்த மாதத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்தியுள்ளன.

அதேபோல், மற்றும் மத்திய கிழக்கில், இஸ்ரேல், டுபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஹொங்ஹொங் ஆகிய நாடுகள் ஏற்கனவே தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளன.

வட அமெரிக்காவில், அமெரிக்காவும் கனடாவும் மே மாதத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடத் தொடங்யுள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் ஃபைசர் - பயோஎன்டெக் தடுப்பூசியைப் பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US