அனைவருக்கும் நன்றி! லண்டனில் இலங்கை பெண், தமிழ்ப்பெண்ணை நெகிழ்ச்சியடைய வைத்த ஒரு நிகழ்வு
லண்டனில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் ஒரு தடுப்பூசி மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குறித்து அவர்களிடம் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளனர்.
Croydonல் உள்ள Centrale Shopping Centre அமைந்துள்ள தடுப்பூசி மையத்துக்கு வந்து பலரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். இது குறித்து அங்கு வந்த தம்பதிகளான ஜெஸ் மற்றும் பவுல் பைய்லி கூறுகையில், நாங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக செய்யவே விரும்புவோம்.
அதே போல தடுப்பூசியையும் செலுத்தி கொண்டோம். இது ஒரு சிறந்த அனுபவம், ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மிகவும் நட்பாக இருந்தனர், அவர்கள் அனைவருக்கும் நன்றி. தயவுசெய்து வந்து உங்கள் பூஸ்டரை எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள் என கூறியுள்ளனர்.
சாரா பசல் (31) என்ற இலங்கையை சேர்ந்த இளம்பெண் கூறுகையில், நான் வழக்கறிஞராக உள்ளேன். இந்த இடத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டதையடுத்து மிகவும் நன்றாக உணர்கிறேன், அனைவரையும் அங்கு சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவும், தங்களைச் சுற்றியுள்ள அனைவரையும் பாதுகாக்கவும் ஊக்குவிக்கிறேன் என கூறியுள்ளார்.
சுப்ரபா தாமோதரன் என்ற தமிழ்ப்பெண் தனது மகளுடன் சேர்ந்து தடுப்பூசி செலுத்தி கொண்டார். மகள் கூறுகையில், எனது தாயார் பூஸ்டர் ஜப்பைப் பெற விரும்பினார், ஏனெனில் அவரது நண்பர்கள் பலரும் ஏற்கனவே செலுத்தி கொண்டனர்.
அந்த குழுவில் பூஸ்டர் செலுத்தி கொள்ளாத ஒரே நபராக சுப்ரபா தாமோதரன் தான் இருந்தார். அதனால் அவர் சீக்கிரம் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும் என நான் நினைவூட்டி கொண்டே இருந்தேன், இப்போது என் தாய் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
இங்குள்ள ஊழியர்கள் மிக சிறப்பாக செயல்பட்டனர் என கூறியுள்ளார்.
தடுப்பூசி மைய மேட்ரன் பெர்ன்ஹார்ட் கிரிசிபோ கூறுகையில், தடுப்பூசிகள் கோவிட்க்கு எதிரான முக்கிய பாதுகாப்பு. உங்கள் தடுப்பூசியை மறக்காமல் செலுத்தி கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.