இந்திய கொரோனா மாறுபாட்டை தடுக்க முடியாது! பிரித்தானியா பிரதமருக்கு விஞ்ஞானிகள் பகிரங்க எச்சரிக்கை
இந்திய கொரோனா மாறுபாடு குறித்து பிரித்தானியா பிரதமர் போர் ஜான்சனுக்கு விஞ்ஞானிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரித்தானியாவின் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டத்தின் படி ஜூன் 21ம் திகதி சமூக இடைவெளி தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படவுள்ள நிலையில் விஞ்ஞானிகள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது, பிரித்தானியாவில் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளில் தடுப்பூசி போடுவதை அதிகரித்தாலும், அது இந்திய கொரோனா மாறுபாடு பரவுவதை தடுக்க போதுமானதாக இருக்காது என விஞ்ஞானிகள் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது, இந்திய கொரோனா மாறுபாட்டை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம், இன்னும் சில தினங்களில் அதுகுறித்து கூடுதல் விவரங்கள் தெரியவரும்.
இந்திய மாறுபாட்டை தடுக்க மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், அதை அமுல்படுத்த அடுத்த ஆய்வு வரை காத்திருக்காமல் உடனடியாக எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
பிரித்தானியாவின் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டத்தின் கடைசி கட்டமான ஜூன் 21ம் திகதி அன்று சமூக இடைவெளி தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகள் நீக்குவது குறித்த அடுத்த ஆய்வு ஜூன் 14 அன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்த்ககது.
பிரித்தானியாவின் போல்டன் நகரில் இந்திய கொரோனா மாறுபாடு மிக தீவிரமாக பரவி வருகிறது.
கடந்த வாரத்தில் 100,000 பேருக்கு என்ற தொற்று விகிதம் இரட்டிப்பாகியுள்ளது. இதனால், போல்டன் நகரில் மீண்டும் உள்ளூர் ஊரடங்கு விதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.