பொது இடங்களுக்கு செல்ல இது கட்டாயம்! நியூயார்க்கில் அமலுக்கு வரும் புதிய நடைமுறை..
நியூயார்க் நகரத்தில் மக்கள் பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி பாஸ் முறை கொண்டு வரப்படுகிறது.
கடந்த ஆண்டு தோன்றிய கொரோனா இன்று வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே இருக்கின்றது.
கொரோனாவை கட்டுக்குள் அடக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அவை முற்றிலும் தோல்வியாக அமைந்துவிடுகிறது. கொரோனா இரண்டாவது அலையே ஓயாத நிலையில் மூன்றாவது அலைக்கு எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் நியூயார்க்கில் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது key to NYC என்ற தடுப்பூசி பாஸ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நடைமுறை வருகின்ற 16ஆம் தேதி முதல் தொடங்கும். பொது இடங்களான உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்ற இடத்திற்கு செல்லும் பொழுது தடுப்பூசி பாஸ் முக்கியம் என்று நியூயார்க்கின் நகர மேயர் கூறியுள்ளார்.