கனடா செல்பவர்களுக்கான தடுப்பூசி விதிமுறைகளில் நவம்பர் 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் மாற்றம்
நவம்பர் 30ஆம் திகதி முதல் கனடாவுக்குள் நுழைய அனுமதி பெற்ற கனேடியர்களும் மற்றவர்களும் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் என அங்கீகரிக்கப்படும் நிலையில், அவர்களும், கனடாவிலிருந்து வெளியேறிவிட்டு கனடாவுக்குள் 72 மணி நேரத்திற்குள் மீண்டும் நுழைவோரும், கனடாவுக்குள் நுழைவதற்கு முன் செய்யப்படும் மூலக்கூறு கொரோனா பரிசோதனை முடிவுகளை (pre-entry molecular test result) சமர்ப்பிக்கவேண்டியதில்லை.
இந்த விதி அவர்களுடன் பயணிக்கும், 12 வயதுக்கு கீழ் உள்ள அவர்களுடையபிள்ளைகளுக்கும் பொருந்தும் (அந்த பிள்ளைகள் தடுப்பூசி பெற்றிருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி).
அவ்வகையில் கனடாவுக்குள் நுழைவதற்கான அனுமதி யாருக்கெல்லாம் என்றால், கனேடிய குடிமக்கள், நிரந்தர வாழிட உரிமம் வைத்திருப்பவர்கள், இந்தியச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்கள், மற்றும் 12 வயதுக்கு கீழ் உள்ள அவர்களுடைய பிள்ளைகள்.
முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் என அங்கீகரிக்கப்படுபவர்கள் யார்?
நீங்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றவர் என அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், குறைந்தபட்சம் இரண்டு டோஸ்கள் கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியோ அல்லது கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளைக் கலந்தோ (a mix of 2 accepted vaccines) போட்டுக்கொண்டிருக்கவேண்டும்.
அல்லது, ஒரு டோஸ் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பெற்றிருக்கவேண்டும்.
உங்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி, நீங்கள் கனடாவுக்குள் நுழைவதற்கு 14 நாட்கள் முன்பு போடப்பட்டிருக்கவேண்டும்.
ArriveCAN ஆப்பில் நீங்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான ஆதாரத்தை நீங்கள் பதிவேற்றம் செய்திருக்கவேண்டும். அவற்றிற்கான ரசீது, பரிசோதனை முடிவு முதலான ஆதாரங்களை உங்களுடன் வைத்திருக்கவேண்டும்.
உங்களுக்கு, கொரோனா அறிகுறிகள் எதுவும் இருக்கக்கூடாது.
எந்தெந்த தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டவை?
- பைசர் (Comirnaty, tozinameran, BNT162b2)
- மொடெர்னா (Spikevax, mRNA-1273)
- ஆஸ்ட்ராசெனகா (Vaxzevria, COVISHIELD, ChAdOx1-S, AZD1222)
- ஜான்சன் அண்ட் ஜான்சன் (Ad26.COV2.S)
2021 நவம்பர் 30, அதிகாலை 03:01 மணி (EST) முதல், உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவையான கீழ்க்கண்ட கொரோனா தடுப்பூசிகளும் கனடா அரசால் அங்கீகரிக்கப்பட உள்ளன.
- பாரத் பையோடெக் (Covaxin, BBV152 A, B, C)
- சினோபார்ம் (Beijing) BBIBP-CorV (Vero Cells)
- சினோவாக் (CoronaVac, PiCoVacc)