என் வாழ்க்கையில் சோறு போட்ட தெய்வம் அவரு- மனம் திறந்த வடிவேலு
நடிகர் வடிவேலு நேர்காணல் ஒன்றில் கண்கலங்கிய படி மனம் திறந்து பல விடயங்களை பேசியுள்ளார்.
நடிகர் வடிவேலு
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஜாம்பவானாக பல கோடி மக்கள் நெஞ்சங்களில் நிலைத்து நிற்பவர் வைகைப்புயல் வடிவேலு.
முகபாவனை, கவுண்டர், நடிப்பு என நகைச்சுவைக்கென தனி உடல் மொழியை உருவாக்கியவர் வடிவேலு.
சில ஆண்டுகளாக திரையில் காணமல் போன வடிவேலு "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்" மூலமாக தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க வந்தார்.
இதன் பிறகு மாரிசெல்வராஜ் இயக்கத்தில் "மாமன்னன்" படங்களில் நடித்த வடிவேலுவுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், வடிவேலு விருந்தினராக பங்கேற்ற "‘டாப் குக் டூப் குக்" சமையல் நிகழ்ச்சியின் நடுவர் வெங்கடேஷ் பட் வடிவேலுவிடம் சிறப்பு நேர்காணல் எடுத்தார்.
மனம் திறந்த வடிவேலு
"கவுண்டமணி , செந்தில் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த காலம் அது. மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் ராஜ்கிரணை சந்தித்த போது அவருக்கு நான் மோனோஆக்டிங் செய்து காட்டினேன்.
அதை பார்த்து என்னை மிகவும் பாராட்டிய அவர் சென்னைக்கு வாடா என்று என்னை அவருடன் அழைத்து வந்தார். எனக்கு வாழ்க்கையில சோறு போட்ட தெய்வம்னா அது ராஜ்கிரண் தான்.
எங்க அம்மா அப்பாவுக்கு பிறகு அவர்தான். அவர் பெத்த பிள்ளைய போல அவரு ஆபிஸ்ல எனக்கு சோறு போட்டு பாத்துக்கிட்டாரு.
கவுண்டமணி செந்தில் இருந்த காலத்துல அவரு தான் தமிழ் சினிமாவுல என்னை உள்ள விட்டாரு" என்று வடிவேலு ராஜ்கிரண் குறித்து பேசியிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |