நடிகர் வடிவேலு உடல்நிலை எப்படியுள்ளது? வெளியான முக்கிய தகவல்
கொரோனா பாதித்த நடிகர் வடிவேலு உடல்நிலை குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ளார்.
நகைச்சுவை ஜாம்பவான் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் உருவாகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இப்படத்தின் பணிகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் பூஜையோடு துவங்கியது. பின்னர் சாங் கம்போசிங் பணிக்காக, படக்குழுவினருடன் வடிவேலு லண்டன் சென்றிருந்தார்.
அந்த பணிகளை முடித்துக்கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வந்த வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வடிவேலுவின் உடல்நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது.
அவருடன் தொடர்பில் இருந்த இயக்குனர் சுராஜ் மற்றும் தயாரிப்பாளருக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு மரபணு மாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது.
வடிவேலுவுக்கு முதல் நிலை அறிகுறியான அறிகுறி இருக்கும் காரணத்தினால் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.