கிங்காங் மகள் திருமணத்தில் நடிகர் வடிவேலு வைத்த மொய்.., எவ்வளவு தெரியுமா?
காமெடி நடிகர் கிங்காங் மகள் திருமணத்திற்கு சினிமா நடிகர்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை நேரில் சந்தித்து பத்திரிக்கை வைத்தார் கிங்காங்.
இந்நிலையில் கடந்த ஜூலை 10ஆம் திகதி காலை திருமணமும், மாலை வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.
திரைத் துறையில் இருந்து விஷால், நாசர், சார்லி, ரோபோ சங்கர், ஐசரி கணேஷ் போன்றவர்கள் கிங்காங் மகளின் வரவேற்புக்கு நேரில் சென்று வாழ்த்தினர்.
இந்நிலையில் திருமணத்திற்கு நேரில் வராவிட்டாலும் நடிகர் வடிவேலு போனில் கிங்காங்கை அழைத்து பேசியுள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கிங்காங் இதுகுறித்து பேசும்போது, நடிகர் வடிவேலு குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலுக்கு சென்றதால் நேரில் வரவில்லை.
இருந்தாலும் திருமணத்தின் அன்றைய இரவு என்னிடம் போனில் பேசினார். வடிவேலு சார்பாக அவரின் மேனேஜர் திருமணத்தில் கொண்டார்.
அவர்கள் மூலமாக 1 லட்சம் ரூபாய் மொய் பணமாக வடிவேலு கொடுத்திருந்தார். மேலும், திருமணத்தில் யாரும் கலந்துகொள்ளவில்லை என வருத்தப்பட வேண்டாம் எனக் கூறினார்.
மேலும், திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்தது எட்டரை கோடி மக்களும் வந்தது போல எனவும் வடிவேலு கூறினார் என்று கிங்காங் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |