விஜயகாந்தை நினைத்து பார்த்து வீட்டிலிருந்து வடிவேலு அழுதிருக்கலாம்: சரத்குமார்
விஜயகாந்த் மறைவை வீட்டிலிருந்தே பார்த்து நடிகர் வடிவேலு அழுதிருக்கலாம் என சரத்குமார் பேசியுள்ளார்.
விஜயகாந்த் மறைவு
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 -ம் திகதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இவரது மறைவுக்கு பிரபலங்களும், மக்களும் இரங்கல் தெரிவித்து வந்தனர். மேலும், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத பல திரைப் பிரபலங்கள் அவரது நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சரத்குமார் பேசியது
இந்நிலையில் மறைந்த விஜயகாந்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. அதில் ராதாரவி, நாசர், சரத்குமார், கமல்ஹாசன், ரகுமான், நடிகை ரித்திகா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் சரத்குமார், "இப்படி ஒரு நினைவேந்தல் கூட்டத்தில் நான் கலந்து கொள்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. புலன் விசாரணை படத்தில் நான் வில்லனாக நடித்த போது என்னை பார்த்து இவர் எப்படி மீசை இல்லாமல் நடிப்பார் என்று பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், அடுத்த இரண்டு நிமிடத்தில் நான் விஜயகாந்தை மீசை இல்லாமல் பார்த்தேன்.
விஜயகாந்தைப் பற்றி 3 நிமிடம் பேச சொன்னார்கள். ஆனால் அவரைப் பற்றி மூன்று தலைமுறைக்கு கூட பேசலாம். விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் வடிவேலு வரவில்லை என பல குற்றச்சாட்டு வந்து கொண்டிருக்கிறது.
அவர் விஜயகாந்தை நினைத்து வீட்டில் உட்கார்ந்து அழுதிருக்கலாம். ஒரு வேளை வந்திருந்தால் திட்டுவார்கள் என்று நினைத்துருக்கலாம். மறப்போம் மன்னிப்போம் என்ற குணம் படைத்த விஜயகாந்த், நிச்சயம் வடிவேலுவை மன்னித்திருப்பார். விஜயகாந்தின் ஆன்மா நடிகர் சங்கத்தையும் தமிழ் சமூகத்தையும் ஆசிர்வதிக்கட்டும்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |