அவர் என்ன அமெரிக்காவுல இருந்தா வந்துருக்காரு.. மாரிசெல்வராஜ்க்கு ஆதரவாக குரல் கொடுத்த வடிவேலு
தென்தமிழகத்தில் பெய்த கனமழையால் களத்தில் இருந்து உதவிய இயக்குநர் மாரி செல்வராஜ்க்கு ஆதரவாக நடிகர் வடிவேலு குரல் கொடுத்துள்ளார்.
இயக்குநருக்கு ஆதரவாக வடிவேலு
மிக்ஜாம் புயலில் ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னையில் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதனால், புதிதாக 5,000 புதிய மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகர் வடிவேலு, பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் வடிவேலு, "மரம் நடும் முயற்சியை தமிழகத்தில் எல்லா பகுதிகளிலும் செய்ய வேண்டும்.
இயக்குநர் மாரிசெல்வராஜ் தூத்துக்குடியில் வெள்ள மீட்பு பணியில் ஏன் ஈடுபடுகிறார் என்று கேட்கிறார்கள். அது அவர் ஊர், அவர் செய்யாமல் வேற யார் செய்வார்கள். அவர் என்ன அமெரிக்காவில் இருந்தா வந்திருக்கிறார்" என பேசியுள்ளார்.
தமிழக அரசுக்கு பாராட்டு
பின்பு செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு, "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
விமர்சனம் செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருப்பார்கள். அதையெல்லாம் எடுத்துக்கொள்ள கூடாது. கருணாநிதி பெறாத விமர்சனமா, அரசு தனது கடமையை சிறப்பாக செய்கிறது" என்று பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |