57 ஆண்டுகால சாதனையை 15 வயதில் முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி
Vaibhav Sooryavanshi breaks 57 years old record: இந்திய கிரிக்கெட் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி துலீப் கிண்ணத்தில் புதிய சாதனை படைத்தார்.
துலீப் கிண்ணப் போட்டியில் கிழக்கு மண்டல அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி 57 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
வைபவ் சூர்யவன்ஷி
கிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலம் அணிகளுக்கு இடையிலான துலீப் கிண்ண அரையிறுதிப் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.
Vaibhav Sooryavanshi hitting it all around the park🤯🔥 pic.twitter.com/lP9WGFwVDP
— Abhishek (@unfav_abhishek3) August 31, 2026
மத்திய மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 266 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ரிங்கு சிங் 60 ஓட்டங்கள் எடுத்தார். முகேஷ் குமார், அபிஜித் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய கிழக்கு மண்டல அணியில் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.
57 ஆண்டுகால சாதனை
அதிரடி அரைசதம் அடித்த அவர், லக்ஷ்மண் சிங்கின் 57 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். அதாவது, 1969ஆம் ஆண்டில் லக்ஷ்மண் சிங் தனது 16 வயது 23-வது நாளில் துலீப் கிண்ணத்தில், தனது முதல் அரை சதத்தை அடித்தார்.
ஆனால் வைபவ் சூர்யவன்ஷி 15 வயது 157 நாட்களிலேயே அரைசதம் கடந்து, துலீப் கிண்ண வரலாற்றிலேயே அரைசதம் அடித்த மிக இளம் வயது துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
தொடர்ந்து ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 81 பந்துகளில் 7 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 92 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |