10 வயதில் சதம் விளாசிய வைபவ் சூர்யவன்ஷியின் தம்பி ஆசிர்வாத்
வைபவ் சூர்யவன்ஷியின் தம்பி ஆசிர்வாத் சதம் அடித்துள்ளார்.
வைபவ் தம்பி ஆசிர்வாத் சூர்யவன்ஷி சதம்
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி, 15 வயதிற்குள்ளாகவே பல்வேறு சாதனைகளை படைத்து, கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

எதிர்வரும் அயர்லாந்து, இங்கிலாந்து தொடர், ஆசிய கிண்ணம் ஆகியவருக்கான இந்திய தேசிய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம் பிடித்ததன் மூலம், இந்திய தேசிய அணிக்காக இளம் வயதிலே தேர்வு செய்யப்பட்ட சச்சினின் 37 வருட சாதனையை முறியடித்துள்ளார்.
இந்நிலையில், வைபவ் சூர்யவன்ஷியின் தம்பியும் அவரை போல், பந்துவீச்சாளர்களை திணறடிக்க களமிறங்கி விட்டார்.

வைபவ் சூர்யவன்ஷியின் தம்பியான 10 வயதான ஆசிர்வாத் சூர்யவன்ஷி(ashirvad sooryavanshi), உள்ளூர் பயிற்சி போட்டி ஒன்றில் சதம் விளாசியது பேசுபொருளாகியுள்ளது.

தாஜ்பூர் கிரிக்கெட் அகாடமி அணிக்காக விளையாடிய ஆசிர்வாத், சதம் 87 பந்துகளில் 20 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 103 ஓட்டங்கள் குவித்துள்ளார். அவரது இன்னிங்ஸின் ஸ்டிரைக் ரேட் 118.39 ஆக இருந்தது.
ஆசிர்வாத்தின் அதிரடி சதத்திற்குப் பிறகு, வைபவ் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது தம்பிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |