இலங்கை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட வைபவ் சூர்யவன்ஷி - வைரலாகும் வீடியோ
சூப்பர் ஓவருக்கு பின்னர், இலங்கை வீரர்களிடம் வைபவ் சூர்யவன்ஷி மோதலில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியா A அணியை வீழ்த்திய இலங்கை A
இந்தியா A , இலங்கை A , ஆப்கானிஸ்தான் A அணிகளுக்குஇடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இன்று தம்புள்ளையில் நடைபெற்ற இந்தியா A மற்றும் இலங்கை A அணிகளுக்கு இடையேயான போட்டியில், முதலில் துடுப்பாட்ட ஆடிய இந்தியா A அணி, 49.2 ஓவர்கள் முடிவில், 265 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
266 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை A அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.
இலங்கை A அணி 17 ஓட்டங்கள் எடுத்த நிலையில், இந்தியா A அணி, இந்திய அணி 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.
வைபவ் சூரியவன்ஷி மோதல்

போட்டி முடிவடைந்த உடன் களத்திலிருந்த இலங்கை வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷியை நோக்கி ஏதோ கூறி, ஆவேசமடைந்த வைபவ் சூர்யவன்ஷி இலங்கை வீரரை தள்ள, பதிலுக்கு இலங்கை வீரரை அவரை பிடித்து தள்ள மைதானத்தில் மோதல் சூழல் நிலவியது.
Vaibhav got into a heated argument with Sri Lankan players after the super over pic.twitter.com/wnGyEF6Nvw
— Abhi (@AbhiMSD_07) June 15, 2026
அதன் பின்னர், இலங்கை வீரர்கள் சமாதானம் செய்த நிலையில், மைதானத்தில் இருந்து வெளியேறும் போது இலங்கை வீரர்களை நோக்கி வைபவ் சூர்யவன்ஷி ஏதோ ஆவேசமாக கூறிக்கொண்டே வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |