இந்திய அணியில் இடம்பெறும் வைபவ் சூரியவன்ஷி? சச்சினின் 37 வருட சாதனையை முறியடிக்க வாய்ப்பு
இந்திய அணியில் வைபவ் சூரியவன்ஷிக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ள நிலையில், சச்சினின் சாதனையை முறியடிக்க உள்ளார்.
இந்திய அணியில் வைபவ் சூரியவன்ஷி?
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரரான வைபவ் சூரியவன்ஷி, தனது அதிரடியான ஆட்டத்தால் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

இதே போல், U-19 ஆசிய கிண்ணம், U-19 உலக கிண்ணம் ஆகியவற்றிலும் தனது ஆட்டத்தின் மூலம், ரசிகர்களின் கவனத்தை மட்டுமின்றி கிரிக்கெட் ஜாம்பவான்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
வைபவ் சூரியவன்ஷிக்கு இந்திய தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென குரல்கள் எழுந்தன.
இந்திய அணியில் தேர்வு செய்யப்பட குறைந்தபட்ச வயது 15 ஆக இருக்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், கடந்த மார்ச் 28 ஆம் திகதி வைபவ் சூரியவன்ஷி 15 வயதை எட்டியுள்ளார்.

இந்நிலையில், இந்திய அணி ஜூன் 26 மற்றும் 28 ஆம் திகதிகளில் அயர்லாந்து சென்று 2 T20 போட்டிகளில் விளையாட உள்ளது.
சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு
இதற்கான அணியில் வைபவ் சூரியவன்ஷியை சேர்ப்பது குறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் 16 வயதில் இந்திய அணியில் இடம்பிடித்து, குறைந்த வயதில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர் என்ற சாதனையை வைத்துள்ளார். வைபவ் சூரியவன்ஷி இந்திய அணியில் இடம்பிடிப்பதன் மூலம், சச்சினின் சாதனையை முறியடிப்பார்.

அதேவேளையில் மகளிர் தேசிய அணியில் ஷஃபாலி வர்மா 15 வயது, ஏழு மாதம், 27 நாட்களில் இடம் பிடித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |