8 ஓட்டங்களில் அவுட்..ஆனால் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி
Vaibhav Sooryavanshi took 2 wickets in duleep trophy: துலீப் டிராபி டெஸ்டில் வைபவ் சூர்யவன்ஷி ஈஸ்ட் ஸோன் அணிக்காக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
துலீப் டிராபி டெஸ்டில் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்த வைபவ் சூர்யவன்ஷி, பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வைபவ் சூர்யவன்ஷி
பெங்களுருவில் நடந்து வரும் துலீப் டிராபி டெஸ்டில் ஈஸ்ட் ஸோன் அணி 467 ஓட்டங்கள் குவித்தது.
Vaibhav Sooryavanshi is now taking wickets too! pic.twitter.com/17IiOuZu9q
— Cricbuzz (@cricbuzz) August 25, 2026
ஷாபாஸ் அகமது 167 ஓட்டங்களும், சுதிப் குமார் 146 ஓட்டங்களும், குமார் குஷாக்ரா 55 ஓட்டங்களும் எடுத்தனர். எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய நார்த் ஈஸ்ட் ஸோன் அணி 111 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதனால் ஃபாலோ-ஆன் ஆகி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
துடுப்பாட்டத்தில் சொதப்பிய வைபவ் சூர்யவன்ஷி 3 ஓவர்கள் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |