15 வயதில் ரூ.2 கோடி ஒப்பந்தம்: வைபவ் சூர்யவன்ஷிக்கு வருவாயை கொட்டித் தரும் ஐபிஎல் 2026
வைபவ் சூர்யவன்ஷியின் விளம்பர ஒப்பந்தங்களுக்கான கட்டணக் கோரிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சாதனைகள் படைத்த வைபவ் சூர்யவன்ஷி
ஐபிஎல் 2026 தொடரில் பல சாதனைகளை படைத்த வைபவ் சூர்யவன்ஷி மொத்தம் ஐந்து விருதுகளை வென்றார்.
அதனைத் தொடர்ந்து, இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்புத் தொடருக்கான 'இந்தியா ஏ' அணியில் அவர் இடம்பிடித்தார்.
மேலும், வைபவ் சூர்யவன்ஷிக்கு வருவாய் மற்றும் ஒப்பந்த மதிப்புகள் உயர்ந்து வருகின்றன. இதனை கிரிக்கெட் துறை நிபுணர் ஒருவர் கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதாவது, ராஜஸ்தான் ராயல்ஸ் அவருக்காக ஆண்டுக்கு ரூ.2 கோடி கேட்கின்றனர் என வட்டாரம் ஒன்று தெரிவித்தது.
ஒன்றுக்கு ரூ.2 கோடி
முன்னதாக Complan, Red Bull போன்ற நிறுவனங்களுடன் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தார். அதேபோல் கூகுள் விளம்பரங்களிலும் வைபவ் சூர்யவன்ஷியின் முகம் இடம்பெற்றிருந்தது.
இது சந்தையில் அதிக முதலீடு செய்யும் நிறுவனங்களிடம் இருந்து அவருக்கு ஆரம்பக்கட்டத்தில் இருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியது.
இவ்வாறாக, ஒப்பந்தம் ஒன்றுக்கு ரூ.2 கோடி என்பது வைபவ் சூர்யவன்ஷியின் 'பிராண்ட்' வருவாய் இரட்டிப்பாக மாறியுள்ளது எனக் காட்டுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |