வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸர்மழையில் சதம்! U19 டி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ருத்ரதாண்டவம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான U19 டி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி சதம் விளாசினார்.
ஆயுஷ் மாத்ரே
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான U19 டி20 உலகக்கிண்ண இறுதிப்போட்டி ஹராரேயில் நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. ஆரோன் ஜார்ஜ் 9 ஓட்டங்களில் இருந்தபோது அலெக்ஸ் கிரீன் பந்துவீச்சில் பென் மயேஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து அணித்தலைவர் ஆயுஷ் மாத்ரே (Ayush Mhatre) களமிறங்க, மறுமுனையில் வைபவ் சூர்யவன்ஷி நாலாபுறமும் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
ருத்ர தாண்டவம்
அவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) 32 பந்துகளில் அரைசதம் கடந்து ருத்ர தாண்டவம் ஆடினார்.

நிதானமாக ஆடிய ஆயுஷ் மாத்ரே தான் சந்தித்த 50வது பந்தில் சிக்ஸர் அடித்து அரைசதம் விளாசி, அடுத்த பந்திலேயே கிரீன் பந்துவீச்சில் 53 ஓட்டங்களில் அவுட் ஆனார். வைபவ் மற்றும் மாத்ரே கூட்டணி 90 பந்துகளில் 142 ஓட்டங்கள் குவித்தது.
இங்கிலாந்தின் பந்துவீச்சை தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி 55 பந்துகளில் சதம் விளாசினார். அவரது ஸ்கோரில் 8 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |