14 வயதில் 100 சிக்ஸர்கள்! சங்ககாரா நம்பிக்கை வைத்த சிறுவன்..யார் இந்த சூர்யவன்ஷி?

Kumar Sangakkara Indian Cricket Team Vaibhav Suryavanshi
By Sivaraj Feb 07, 2026 11:56 AM GMT
Report

வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து அணிக்கு எதிராக U19 உலகக்கிண்ணத்தில் சதம் அடித்து பல சாதனைகளை படைத்தார்.

பிரம்மாண்ட சாதனைகள்

ஹராரேயில் நடந்த U19 உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணி 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி மகுடம் சூடியது. 

Vaibhav Suryavanshi

தோல்வி நிலைக்கு சென்ற பாகிஸ்தான்: ட்விஸ்ட் கொடுத்த ஃபஹீம் அஷ்ரப்..டி20 உலகக்கிண்ணத்தில் வெற்றி

தோல்வி நிலைக்கு சென்ற பாகிஸ்தான்: ட்விஸ்ட் கொடுத்த ஃபஹீம் அஷ்ரப்..டி20 உலகக்கிண்ணத்தில் வெற்றி

இப்போட்டியில் 14 வயதான தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) 80 பந்துகளில் 175 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 15 சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடங்கும்.

இதன்மூலம் U19 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 150 ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

அதேபோல் U19 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சரித்திரத்தையும் படைத்துள்ளார்.

மேலும் இளையோர் ஒருநாள் போட்டிகளில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர், ஒரே இன்னிங்ஸில் 15 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற பிரம்மாண்ட சாதனைகளையும் செய்துள்ளார். 

Vaibhav Suryavanshi

அத்துடன் இளையோர் (U19) ஒருநாள் போட்டியில் 52 பந்துகளில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் கொண்டுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி மொத்தமாக 110 சிக்ஸர்கள் அடித்துள்ள நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் 55 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார்.

யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?

வைபவ் சூர்யவன்ஷி 2011ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் திகதி பீகாரில் உள்ள தஜிபூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஆவார். 

Vaibhav Suryavanshi/Kumar Sangakkara

இவர் தனது 12 வயதிலேயே ரஞ்சிக் கிண்ணத் தொடரில் அறிமுகமாகி பீகாருக்காக விளையாடினார். பின்னர் 13வது வயதில் ஐபிஎல் தொடரில் களம் கண்டார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை 1.10 கோடிக்கு விலைக்கு வாங்கியது. அவர் முதலில் நம்பிக்கை வைத்தவர் இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக வைபவ் ஹிட்டிங் துடுப்பாட்டம் செய்தது சங்ககாராவை ஈர்த்தது.

அதன் பின்னர் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியின் கீழ் மெருகேற்றப்பட்ட வைபவ் சூர்யவன்ஷிதான், தற்போது இந்திய அணி 2026 U19 உலகக்கிண்ணத்தை வெல்ல காரணமாக அமைந்துள்ளார்.

Vaibhav Suryavanshi

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US