ஒரே போட்டியில் ஜாம்பவானின் சாதனையை நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி: குவியும் பாராட்டு
கிறிஸ் கெய்லின் இமாலய சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
வைபவ் சூர்யவன்ஷி
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 97 ஓட்டங்கள் விளாசியதன் மூலம் வைபவ் சூர்யவன்ஷி பல சாதனைகள் படைத்தார்.
அதில் முக்கியமான சாதனை ஜாம்பவான் வீரர் கிறிஸ் கெய்லின் ஒரு சீஸனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை நொறுக்கியதாகும்.
கிறிஸ் கெய்ல் 59 சிக்ஸர்கள் அடித்திருந்த நிலையில், இப்போட்டியில் 12 சிக்ஸர்கள் விளாசி வைபவ் சூர்யவன்ஷி மொத்தம் 65 சிக்ஸர்கள் என்ற எண்ணிக்கையை எட்டினார்.
அதேபோல் நடப்பு சீஸனில் 680 ஓட்டங்கள் (15 இன்னிங்ஸ்) குவித்துள்ளதன் மூலம், ஒரு ஐபிஎல் சீஸனில் Uncapped வீரர் எடுத்த அதிக ஓட்டங்கள் என்ற சாதனையையும் வைபவ் சூர்யவன்ஷி படைத்தார்.
ஒரே வீரர்
ஐபிஎல் ப்ளேஆப் அல்லது நாக்அவுட்டில், அதிவேக அரைசதம் அடித்த சுரேஷ் ரெய்னாவின் சாதனையை (16 பந்துகளில்) வைபவ் சூர்யவன்ஷி சமன் செய்தார்.
ஒரு டி20 தொடரில் அதிக சிக்ஸர்கள் (65) அடித்த ஒரே வீரர் என்ற சாதனையும் வைபவ் சூர்யவன்ஷி படைத்தார்.
மேலும், ஐபிஎல் சீஸன் ப்ளேஆப்பில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஷுப்மன் கில்லின் 10 சிக்ஸர்கள் சாதனையை 12 சிக்ஸர்கள் அடித்து முறியடித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |