தோனியின் காலினை தொட்டு வணங்கிய வைபவ் சூர்யவன்ஷி: வைரலாகும் வீடியோ
ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் எம்.எஸ்.தோனியின் காலினை தொட்டு வணங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
வைபவ் சூர்யவன்ஷி விளாசல்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் 2025யின் தனது கடைசிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.
முதலில் ஆடிய சென்னை அணி 187 ஓட்டங்கள் குவித்தது. ஆயுஷ் மாத்ரே 43 ஓட்டங்களும், டெவால்ட் பிரேவிஸ் 42 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.1 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ருத்ர தாண்டவமாடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) 33 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்கள் விளாசினார்.
No fear and pressure 🙅
— IndianPremierLeague (@IPL) May 20, 2025
Just pure finesse 😎
Vaibhav Suryavanshi with a scintillating fifty in the chase 🔥
Updates ▶ https://t.co/hKuQlLxjIZ #TATAIPL | #CSKvRR | @rajasthanroyals pic.twitter.com/YUsYYeCQC0
வைரலாகும் வீடியோ
போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் மரியாதை நிமிர்த்தமாக மாறி மாறி கைகுலுக்கிக் கொண்டனர்.
அப்போது எதிரே வந்த எம்.எஸ்.தோனியின் (M.S.Dhoni) காலினை வைபவ் சூர்யவன்ஷி தொட்டு வணங்கினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
நடப்பு தொடரில் அறிமுகமான 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி, 7 போட்டிகளில் 252 ஓட்டங்கள் குவித்தார். இதில் ஒரு சதம் (121), ஒரு அரைசதம் அடங்கும். மேலும் 7 இன்னிங்சில் அவர் 24 சிக்ஸர்கள், 18 ஃபோர்ஸ் என மொத்தம் 42 பவுண்டரிகளை விரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
You won our hearts, Vaibhav! 💛✨#CSKvRR #WhistlePodu 🦁💛
— Chennai Super Kings (@ChennaiIPL) May 20, 2025
pic.twitter.com/9q20qfKtAn
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |