தாக்கி ஆடுவேன்: ஐபிஎல் விருதுகளை அள்ளிய வைபவ் சூர்யவன்ஷி
ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 5 விருதுகளை பெற்றார்.
5 விருதுகள்
ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக கிண்ணத்தை கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து ஆரஞ்சு தொப்பி உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றில் 5 விருதுகளை ராஜஸ்தானின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பெற்றார்.
அவர் அதிக ஓட்டங்கள் குவிந்ததால் (776) ஆரஞ்சு தொப்பியையும், மிகவும் மதிப்புமிக்க வீரர் (Most Valuable Player), சீஸனின் வளர்ந்து வரும் வீரர் (Emerging Player), சூப்பர் ஸ்ட்ரைக்கர் (Super Strikers) மற்றும் சீஸனின் சூப்பர் சிக்ஸர்ஸ் ஆகிய விருதுகளை 15 வயதேயான அவர் கைப்பற்றினார்.
எனக்கு பெருமைமிக்க தருணம்
பின்னர் பேசிய வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi), "இது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், நான் நேர்காணல்களை சந்தித்துக் கொண்டிருப்பதால், ஒருவித அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது. இது எனக்கு பெருமைமிக்க தருணம்; அடுத்த சீஸனிலும் சிறப்பாக செயல்பட நான் முழு முயற்சி செய்வேன்.
எனது ஆட்டத்திறனை நான் முழுமையாக நம்புகிறேன். பந்து அடிப்பதற்கு ஏற்றவாறு அமைந்தால், நான் தயங்காமல் முழுவீச்சில் அதைத் தாக்கி ஆடுவேன்; அந்த பாணியிலேயே தொடர்ந்து விளையாடவும் முயற்சிப்பேன்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |