டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி
டி20 கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயது கேப்டன் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரரான வைபவ் சூர்யவன்ஷி, டி20 கிரிக்கெட் வரலாற்றில் இளம் வயது கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
வைபவ் சூர்யவன்ஷி
ஐபிஎல் கிரிக்கெட்டில் 14 வயதிலேயே களமிறங்கி சதம் விளாசி மிரட்டியவர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi).
ஐபிஎல்லில் மிரட்டியதன் மூலம் இந்திய டி20 அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி, 10 போட்டிகளில் 295 ஓட்டங்கள் குவித்திருக்கிறார்.
இந்த நிலையில், சையது முஷ்தாக் அலி கிண்ணத் தொடரில் பீகார் அணிக்கு கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கியுள்ளார்.
சௌராஷ்டிரா அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி பீகார் அணியை வழிநடத்தி வருகிறார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயது கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். தற்போது அவருக்கு 15 வயதாகிறது.
