வைகாசி விசாகம் நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பது எப்படி?
வைகாசி விசாகம் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது.
முருகப்பெருமானின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு, வைகாசி மாதத்தில் மே 22ம் காலை 08.18 மணிக்கு துவங்கி, மே 23ம் திகதி காலை 09.43 மணி வரை விசாகம் நட்சத்திரம் உள்ளது.
வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள் மே 22ம் திகதி நாள் முழுவதும் விசாகம் நட்சத்திரம் உள்ளதால் அன்றைய தினம் விரதம், வழிபாடு, பூஜைகளை மேற்கொள்ளலாம்.
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும்.
இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் ஆகியவற்றை தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.
வைகாசி விசாகம் நாளில் விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும்.
அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு மட்டும் சாப்பிடலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘ஓம் முருகா’ சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |