41 சாவுகள் கன்னத்தில் அறைந்துசொன்ன பாடம் இதுதான் - வைரமுத்து பதிவு
கரூர் துயரத்தின் இறுக்கத்திலிருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் என கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்
தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இச்சம்பவம் குறித்து கவிஞர் வைரமுத்து தொடர்ச்சியாக பதிவுகளை எக்ஸ்தளத்தில் வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் அவர் மீண்டும் ஒரு பதிவை கரூர் துயரம் குறித்து எக்ஸ் தளத்தில் இட்டுள்ளார்.
தமிழர்கள் மெல்லமெல்ல விடுபட வேண்டும்
அதில், "கரூர்த் துயரத்தின் இறுக்கத்திலிருந்து தமிழர்கள் மெல்லமெல்ல விடுபட வேண்டும். ஊடகங்களும், சமூக உரையாடல்களும் அந்த மனத்தடையிலிருந்து வெளியேற வேண்டும்.
அரசியல் கூட்டங்களிலோ, ஆன்மிகக் கூட்டங்களிலோ இனி இந்த நெடுந்துயரம் நிகழாது என்னும் விதிசெய்ய வேண்டும். 41 சாவுகள் கன்னத்தில் அறைந்துசொன்ன பாடம் இதுதான். இந்தக் கருப்புத் துயரத்துக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புடைய யாரும் ஒரு தனி அறையில், தம் மனச்சான்றோடு உரையாடித் தாமே தம்மிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஒரு செய்தி என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது. 8 மணி நேரத்திற்கு மேல் ஒரு வேலையும் இன்றி 27 ஆயிரம் பேர் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்க முடியுமென்றால் அவர்களின் வாழ்வியல் என்ன? அவர்களால் இழக்கப்படும் மனிதவளம் என்ன?
கல்வி நிறைந்த சமூகம் என்கிறோமே இவர்களுக்குள் கல்வி என்ன செய்தது? வெறும் எழுத்தறிவா கல்வி? காலத்தின் அருமையை வாழ்வின் பெருமையைக் கற்றுத் தருவதல்லவா கல்வி.
அந்த 27 ஆயிரம் பேர் இன்னும் கலைந்துவிடவில்லை. நாடெங்கும் அந்த மக்களைக் கணக்கெடுக்க வேண்டும். தொழில் கொடுத்து அவர்களுக்கு நேரமில்லாமல் செய்ய வேண்டும்.
நாளாகலாம்...ஆனால், அதை நோக்கிச் சமூகம் நடந்தே தீர வேண்டும்" என கூறியுள்ளார்.
கரூர்த் துயரத்தின்
— வைரமுத்து (@Vairamuthu) October 4, 2025
இறுக்கத்திலிருந்து
தமிழர்கள் மெல்லமெல்ல
விடுபட வேண்டும்
ஊடகங்களும்
சமூக உரையாடல்களும்
அந்த மனத்தடையிலிருந்து
வெளியேற வேண்டும்
அரசியல் கூட்டங்களிலோ
ஆன்மிகக் கூட்டங்களிலோ
இனி இந்த நெடுந்துயரம்
நிகழாது என்னும்
விதிசெய்ய வேண்டும்
41 சாவுகள்
கன்னத்தில்…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |