கவிப்பேரரசுவின் “வைரமுத்தியம்” கருத்தரங்கு

Arbin
in சுவிட்சர்லாந்துReport this article
கவிப்பேரரசுவின் “வைரமுத்தியம்”பன்னாட்டுக் கருத்தரங்கு 16.03.2025 அன்று சென்னை லீலா பேலஸ் அரங்கில் “வைரமுத்தியம்”எனும் தலைப்பில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
22 தமிழ் அறிஞர்கள்
22 தமிழ் அறிஞர்களின் உரைகளுடன் நடைபெற்ற விழாவில் புலம்பெயர் தமிழர்களிலிருந்து கல்லாறு சதீஷ் என்கிற முனைவர் நாகேஸ்வரன் அருள்ராசா அவர்கள் “வைரமுத்தின் மூன்றாம் உலகப்போரும், வையத்தின் மூன்றாம் உலகப்போரும்”எனும் தலைப்பில் ஆய்வுரையாற்றினார்.
சிங்கப்பூர், மலேசியா, சீனா, கன்னடா, ஆந்திரா, மலையாள அறிஞர்களுடன் தமிழ்நாடு உயர்நீதிமன்ற நீதிபதியும் உரையாற்றினார்.
மு.க. ஸ்டாலின்
கவிப்பேரரசின் படைப்புகள் தொடர்பான அறிஞர்களின் ஆய்வுகள் “வைரமுத்தியம்”எனும் தலைப்பில் நூலாக்கம் செய்யப்பட்டுத் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட, முன்னால் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ஜகத்ரட்சகன் பெற்றுக்கொண்டார்.
மகாகவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலினை முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் வெளியிட மலேசிய முன்னாள் மனிதவளத்துறை அமைச்சர் டத்தோ சரவணன் பெற்றுக்கொண்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |