இந்தி பேசாதவர் இந்தியர் இல்லையா? தமிழ் பெண்ணுக்காக கொந்தளித்த வைரமுத்து
கோவா விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் மிரட்டப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் பெண்ணுக்காக எழுந்த குரல்கள்
சென்னை வருவதற்காக கோவா விமான நிலையம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், இந்தி தெரியாது என்று கூறியதற்கு பாதுகாப்பு படை வீரர் இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியை கற்க வேண்டும் எனும் தொணியில் பேசியதாக செய்திகள் வெளியாகின.
இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, டிடிவி தினகரன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர்.
அந்த வகையில் கவிஞர் வைரமுத்துவும் தற்போது தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
வைரமுத்து கண்டனம்
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பல கேள்விகளை கேட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், 'இந்தி பேசாதவர் இந்தியர் இல்லை என்று அரசமைப்பில் இருக்கிறதா? இந்தியா என்ற நாடு இந்தி என்ற சொல்லடியில்தான் பிறந்ததா? எல்லா மாநிலங்களிலும் புழங்குவதற்கு இந்தி மொழியென்ன இந்தியக் கரன்சியா?
இந்தி பேசும் மாநிலங்களிலேயே இந்தி கல்லாதார் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? வடநாட்டுச் சகோதரர்கள் தமிழ்நாட்டுக்குள் வந்தால் தமிழ் தெரியுமா என்று தொள்ளு தமிழ் மக்கள் எள்ளியதுண்டா?
சிறுநாடுகளும் கூட ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்சிமொழிகளால் இயங்கும்போது இந்தியாவை ஓர் ஒற்றை மொழிமட்டும் கட்டியளா முடியுமா?
22 பட்டியல் மொழிகளும் ஆட்சிமொழி ஆவது தான் வினாத் தொடுத்த காவலர்க்கும் விடைசொன்ன தமிழச்சிக்குமான ஒரே தீர்வு ' என கூறியுள்ளார்.
இந்தி பேசாதவர்
— வைரமுத்து (@Vairamuthu) December 15, 2023
இந்தியர் இல்லை என்று
அரசமைப்பில் இருக்கிறதா?
இந்தியா என்ற நாடு
இந்தி என்ற
சொல்லடியில்தான் பிறந்ததா?
எல்லா மாநிலங்களிலும்
புழங்குவதற்கு
இந்தி மொழியென்ன
இந்தியக் கரன்சியா?
இந்தி பேசும் மாநிலங்களிலேயே
இந்தி கல்லாதார் எண்ணிக்கை
எவ்வளவு தெரியுமா?
வடநாட்டுச்…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |