என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன! வைரமுத்து உருக்கம்
சென்னையில் பிரபல திரையரங்கம் மூடப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
உதயம் திரையரங்கம்
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குவது உதயம் திரையரங்கம். உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என 4 திரைகளைக் கொண்ட இந்த திரையரங்கம் 1983ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.
41 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த திரையரங்கம் தற்போது மூடப்படுகிறது. கட்டுமான நிறுவனம் ஒன்று இந்த இடத்தை வாங்கியிருப்பதாகவும், குடியிருப்பு வளாகம் இங்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது.
வைரமுத்து வருத்தம்
ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சி அளித்த நிலையில், கவிஞர் வைரமுத்துவும் கவலை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், 'ஓரு கலைக்கூடம் மூடப்படுகிறது; இதயம் கிறீச்சிடுகிறது முதல் மரியாதை, சிந்து பைரவி, பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன், ரோஜா என்று நான் பாட்டெழுதிய பல வெற்றிப் படங்களை வெளியிட்ட உதயம் திரைவளாகம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றன.
மாற்றங்களின் ஆக்டோபஸ் கரங்களுக்கு எதுவும் தப்ப முடியாது என்று மூளை முன்மொழிவதை இதயம் வழிமொழிய மறுக்கிறது.
இனி அந்தக் காலத் தடயத்தைக் கடக்கும் போதெல்லாம் வாழ்ந்த வீட்டை விற்றவனின் பரம்பரைக் கவலையோடு என் கார் நகரும் நன்றி உதயம்' என தெரிவித்துள்ளார்.
ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது;
— வைரமுத்து (@Vairamuthu) February 15, 2024
இதயம் கிறீச்சிடுகிறது
முதல் மரியாதை, சிந்து பைரவி,
பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன்
ரோஜா என்று
நான் பாட்டெழுதிய
பல வெற்றிப் படங்களை
வெளியிட்ட உதயம் திரைவளாகம்
மூடப்படுவது கண்டு
என் கண்கள்
கலைக் கண்ணீர் வடிக்கின்றன
மாற்றங்களின்
ஆக்டோபஸ் கரங்களுக்கு… pic.twitter.com/ckGwDDD6bC
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |