புயல் வீசத்தொடங்கினால் ஜன்னல் வாய்மூடிக் கொள்ள வேண்டும்: வைரமுத்து பரபரப்பு கருத்து
கவிஞர் வைரமுத்து மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும் என்று வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் இசை பெரிதா? பாடல் பெரிதா? என்று ஒப்பிடும் வகையில், சில நேரங்களில் இசையைவிட மொழி பெரியதாக இருக்கும் என்று கவிஞர் வைரமுத்து பேசியது பரவலான செய்தியானது.
அவரது இந்த கருத்து இசையமைப்பாளர் இளையராஜாவை தாக்கி பேசுவது போல் இருப்பதாக சமூக வலைத்தளங்களிலும் விவாதமாக மாறியது.
அதனைத் தொடர்ந்து, இளையராஜா குறித்து இனிமேல் பேசினால் நடப்பதே வேறு என்று என இயக்குனர் கங்கை அமரன் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
ஆனால் அவரது இந்த வீடியோவுக்கு வைரமுத்து எந்த பதிலும் தரவில்லை. இந்த நிலையில் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ''குயில் கூவத் தொடங்கிவிட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும்; புயல் வீசத் தொடங்கிவிட்டால் ஜன்னல் தன் வாயை மூடிக்கொள்ள வேண்டும். வெள்ளம் படையெடுக்கத் தொடங்கிவிட்டால் நாணல் நதிக்கரையில் தலைசாய்த்துக் கொள்ள வேண்டும். மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால், கவிஞன் தன் குரலைத் தனித்துக் கொள்ள வேண்டும்; அது தான் நடந்து கொண்டிருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.
குயில்
— வைரமுத்து (@Vairamuthu) May 4, 2024
கூவத் தொடங்கிவிட்டால்
காடு தன் உரையாடலை
நிறுத்திக்கொள்ள வேண்டும்
புயல்
வீசத் தொடங்கிவிட்டால்
ஜன்னல் தன் வாயை
மூடிக்கொள்ள வேண்டும்
வெள்ளம்
படையெடுக்கத் தொடங்கிவிட்டால்
நாணல் நதிக்கரையில்
தலைசாய்த்துக்கொள்ள வேண்டும்
மக்கள்
தனக்காகப்
பேசத் தொடங்கிவிட்டால்
கவிஞன் தன்…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |