கருப்பினப் பெண்புலிகள் ஆணாதிக்கத்தை எதிர்த்து..மிரண்டுபோய் வெளியிட்ட வைரமுத்துவின் பதிவு
ஹாலிவுட் படம் ஒன்றைப் பார்த்து மிரண்டுபோனதாக கவிதை மூலம் கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ஹாலிவுட் திரைப்படம் The Woman King.
ஹாலிவுட் திரைப்படம்
ஆணாதிக்கத்தை எதிர்த்து ஆப்பிரிக்க பெண்கள் போராடும் கதைக்களத்தை கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கும். இந்தியாவில் பிப்ரவரி மாதம் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில் The Woman King படத்தைப் பார்த்து கவிஞர் வைரமுத்து வியந்துபோனார். படத்தைப் பார்த்து மிரண்டுபோன தனது அனுபவத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை வடிவில் கூறியுள்ளார்.
வைரமுத்துவின் பதிவு
அவரது பதிவில், 'ஓர் ஆப்பிரிக்கப் படம் பார்த்தேன், THE WOMAN KING அரிதான பூகோளம் அறியாத சரித்திரம். கருப்பினப் பெண்புலிகள் ஆணாதிக்கத்தை எதிர்த்து நின்றாடிக் களம்கண்டு கொன்றாடி முடித்து வென்றாடி வந்த கதை. ஒரு வசனம் வரும்: ''போராளியாக வேண்டுமா முதலில் நீ உன் கண்ணீரைக் கொல்ல வேண்டும்'' அற்புதம்' என கூறியுள்ளார்.
ஓர் ஆப்பிரிக்கப்
— வைரமுத்து (@Vairamuthu) April 9, 2023
படம் பார்த்தேன்
THE WOMAN KING
அரிதான பூகோளம்
அறியாத சரித்திரம்
கருப்பினப் பெண்புலிகள்
ஆணாதிக்கத்தை எதிர்த்து
நின்றாடிக் களம்கண்டு
கொன்றாடி முடித்து
வென்றாடி வந்தகதை
ஒரு வசனம் வரும்:
"போராளியாக வேண்டுமா
முதலில் நீஉன்
கண்ணீரைக் கொல்லவேண்டும்"
அற்புதம் pic.twitter.com/fLFEj38PhT